பட்டாசு கடை வெடி விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி.!
karnataga govt compensation announce to firecrackers shop fire accident died peoples
பட்டாசு கடை வெடி விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி.!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்த நவீன் என்பவருக்கு கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளி பகுதியில் பட்டாசு கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் நேற்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறியது.
இதில், பட்டாசு கடை முன்பு நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி, இரண்டு கனரக வாகனங்கள், மூன்று இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமடைந்தன. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அனைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. ஆனால், தற்போது பட்டாசு கடை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 10 பேர் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த சம்பவத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இரங்கல் தெரிவித்து, தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளேன்" என்றுத் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில், இந்தத் தீ விபத்து நடந்த பகுதிக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது அவர், "அதிகாரிகளை சந்தித்து விவரங்களை கேட்டறிந்துள்ளார். பட்டாசு தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்கும் என்று அறிவித்துள்ளார். இதன்படி, பட்டாசு தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
karnataga govt compensation announce to firecrackers shop fire accident died peoples