தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது - கர்நாடகா அதிரடி முடிவு.!
karnataga not open cauvery river to tamilnadu
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பிப்ரவரி, மார்ச் உள்ளிட்ட மாதங்களில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரையும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நீரையும் தடையின்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு கர்நாடக தரப்பில், "கர்நாடகாவில் குடிநீர் பிரச்சினை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் நீர் இருப்பு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
English Summary
karnataga not open cauvery river to tamilnadu