மாணவரை "கசாப்" என்று அழைத்த விவகாரம் : இது தீவிரமான விஷயம் இல்லை என்று நான் உணர்கிறேன் - அமைச்சர் பி.சி. நாகேஷ்.!
karnataga teacher call student kasaap case minister b c nagesh speach
சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மணிபால் தனியார் கல்லூரியில் முஸ்லீம் மாணவர் ஒருவரை பேராசிரியர் பயங்கரவாதி என்று அழைத்த வீடியோ சமூக வலைதளகத்தில் வைரலானதை தொடர்ந்து நேற்று அவர் கல்லூரி நிறுவனத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்ததாவது:- "இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது தான். ஆசிரியர் அந்தப் பெயரைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது.
இருப்பினும் இது ஒன்றும் தீவிரமான விஷயம் இல்லையென்று நான் உணர்கிறேன். ஏனென்றால், நாம் பலமுறை மாணவர்களை 'ராவணன்' என்றும் சகுனி என்றும் அழைக்கிறோம்.
இது எல்லாம் ஒருபோதும் பிரச்சனையாக மாறியதில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 'கசாப்' என்ற பெயர் மட்டும் ஏன் பிரச்சனையாக மாறியது என்று எனக்குத் தெரியவில்லை. அரசு இந்த விவகாரத்தில் தீவிரமாக நடவடிக்கை எடுத்தாலும், சில பெயர்கள் மட்டும் ஏன் தேசிய பிரச்சனையாக மாறுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது தான். ஆனாலும் அதற்கான உரிய நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. அந்த பேராசிரியரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து விட வேண்டும். அமைச்சர்களையும் பொதுவாக ராவணன், சகுனி போன்ற பெயர்களால் குறிப்பிடுகிறோம். அது மட்டும் ஏன் செய்தியாக மாறுவதில்லை? ராவணன் என்ற பெயருக்கு ஏதாவது நேர்மறை அர்த்தம் உள்ளதா? இல்லையே. நான் எதையும் ஒப்பிட்டு பேசவில்லை.
இந்த விஷயத்தை சில அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட சமூகத்தினருக்காக பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும் ஆசிரியர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. இளம் மனங்கள் புண்படக்கூடாது" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
karnataga teacher call student kasaap case minister b c nagesh speach