கர்நாடகா: சாதிவாரி கணக்கெடுப்பை தொடர்ந்து ஓபிசி இடஒதுக்கீடு அதிகரிப்பு!
Karnataka caste census OBC Reservation
2015ம் ஆண்டு, கர்நாடக மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த அறிக்கை 2024 பிப்ரவரியில் முதல்வர் சித்தராமையாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில் அது மாநில அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வரும் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறும் சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
அறிக்கையின் முக்கிய பரிந்துரை OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக உயர்த்தும் வழியில் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், OBC-கள் 4.18 கோடி பேராக இருக்கின்றனர். இது மாநில மக்கள்தொகையின் 75 சதவீதம். SC மக்கள் 1.09 கோடி, ST மக்கள் 42.81 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
OBC-கள் இடஒதுக்கீடில் மேலும் துணை பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமூகங்களுக்கு தலா 3 சதவீதம் கூடுதல் இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
மேலும், 75.27 லட்சம் முஸ்லிம்கள் OBC பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், தற்போது வழங்கப்படும் 4 சதவீத இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது செயல்பட்டால், மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீடு 85 சதவீதமாகும்.
English Summary
Karnataka caste census OBC Reservation