குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2,000 | ஒரே மாதத்தில் சொன்ன வாக்குறுதியை காப்பாற்றிய முதல்வர் சித்தமையா! - Seithipunal
Seithipunal


கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையில் 5 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், 
* குடும்ப தலைவிக்கு மாதம் 2,000 நிதியுதவி, 
* மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம், 
* அன்னபாக்யா திட்டத்தில் பிபிஎல் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி, 
* அரசு போக்குவரத்து பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம்,
* படித்த பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவி தொகை என்று ஐந்து முக்கிய வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

நடந்து முடிந்த அந்த தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்று உள்ளனர்.

இதை தொடர்ந்து இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஐந்து வாக்குறுதிகளை அமல்படுத்துவது தொடர்பாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

* வரும் ஜூலை 1ம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் கடைகளில் 10 கிலோ அரிசி திட்டம் அமலுக்கு வருகிறது.

* ஜூலை 1ம் தேதி முதல் 200 யூனிட் மின்சாரம் இலவச திட்டம் அமலுக்கு வருகிறது.

* ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்பட உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

* ஜூன் 11 முதல் அரசு போக்குவரத்து பேருந்தில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் தொடங்கப்பட உள்ளது.

மேலும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழக்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka CM Announce june 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->