கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்... தலித் பெண்ணை கட்டி வைத்து செருப்பால் அடித்த நபர்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் கொம்பல் மாவட்டம் கனககிரி தாலுகா ராம்பூரா என்ற கிராமத்தில் நிலத்தில் மேய்ச்சலுக்கு மாடு கட்டிய காரணத்திற்காக பட்டியலின பெண்ணை கட்டி வைத்து ஒருவர் செருப்பால் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 3ஆம் தேதி அமீரேசப்பா என்பவர் நிலத்தில் பட்டியலின பெண் சோபம்மா தனது மாட்டை மேய்க்க கட்டிப் போட்டுள்ளார். அப்பொழுது அமீரேஷப்பா மாட்டை மீட்க சென்ற உரிமையாளர் என 30 வயது சோபமா என்ற பட்டிலின பெண்ணை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு அவரை செருப்பால் அடித்துள்ளார்.

அந்தப் பெண்ணின் இனம், மதம் குறித்து ஆபாச வார்த்தைகளால் திட்டிய சம்பவம் குறித்தான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட சோபம்மா கங்காவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோபாம்மாவை அமீரேசப்பா தாக்கிய வீடியோவை ஆதாரமாகக் கொண்டு கனககிரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நிலத்தின் உரிமையாளர் அமீரேசப்பா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அமீரேசப்பாவை போலீசார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தலைப்பின் தாக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பட்ட மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Dalit woman tied up and beaten video viral on internet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->