மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி - துணை முதல்வர் டி.கே சிவக்குமார் - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டிகே சிவக்குமார், நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் முதல்முறையாக டிகே சிவக்குமார், பெங்களூருவில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவக்குமார், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும். மேலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பேன்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. மேலும் வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Deputy CM Sivakumar confirmed construction of dam at Meghadatu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->