கர்நாடக தேர்தல் கருத்து கணிப்பு | காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! மீண்டும் குமாரசாமிக்கு வாய்ப்பு! காங்கிரஸ் நிலை?!  - Seithipunal
Seithipunal


மொத்தம் 224 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், தற்போது தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் வெளியான தேர்தல் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல நிறுவனங்களை சேர்ந்த கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, 

தி ஏடு பிரஸ் குரூப்:

பாஜக : 110-120
காங்கிரஸ் :   70-80
மதசார்பற்ற ஜனதா தளம் (JDS) :  10-15
மற்றவை :    4-9

ஏபிபி சி-வோட்டர் :

பாஜக :   68-80  
காங்கிரஸ் : 115-127 
மதசார்பற்ற ஜனதா தளம் (JDS):   23-35
மற்றவை : 0

ஜீ நியூஸ் மாட்ரிஸி :

பாஜக : 96-106
காங்கிரஸ் :  88-98
மதசார்பற்ற ஜனதா தளம் (JDS) :  23-33
மற்றவை : 02-07

கர்நாடக டிவி : 

பாஜக : 107
காங்கிரஸ் : 75
மதசார்பற்ற ஜனதா தளம் (JDS) : 36
மற்றவை : 6

பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும். ஆனால், கருத்து கணிப்புகள்படி கர்நாடகாவில் பாஜக அல்லது காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது.

அதே சமயத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவும் வாய்ப்பு உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் இப்படியான ஒரு சூழ்நிலை வந்து, மாறி, மாறி ஆட்சி செய்து கடைசியாக பாஜக ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KARNATAKA ELECTION 2023 POLL


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->