ஜெகதீஷ் ஷெட்டர்,  சி.டி.ரவி தொடர் பின்னடைவு! அதிர்ச்சி கொடுக்கும் நட்சித்திர வேட்பாளர்கள்! - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தற்போது வரை (காலை 10:30 மணி நிலவரப்படி) காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி 115 இடங்களிலும், பாஜக 79 இடங்களிலும், மதச் சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களிலும், சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகள் ஐந்து இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.

இதில், நட்சத்திர வேட்பாளர்களின் முன்னிலை மற்றும் பின்னடைவு விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, 

மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முன்னிலை பெற்றுள்ளார்.

சிக்மகளூரு தொகுதியில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தொடர் பின்னடைவு.

சாம்ராஜ் பேட்டை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜமீர் அகமத் கான் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட பெங்களூரு முன்னாள் காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் பின்னடைவு.

ஷிகாரிபுரா தொகுதியில் பிஎஸ் எடியூரப்பாவின் மகனும், பாஜகவின் பிஒய் விஜயேந்திராவும் முன்னிலை வகிக்கின்றனர்.

கர்நாடக முதல்வரும், பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை, ஷிகான் சட்டமன்றத் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் ஹூப்ளி-தர்வாட்-மத்திய தொகுதியில் பின்தங்கியுள்ளார், மாநில அமைச்சர் சிஎன் அஷ்வத் நாராயண் மலேஸ்வரத்தில் முன்னிலை வகிக்கிறார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார், பாஜகவின் ஆர்.அசோகா பின்தங்கியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kARNATAKA ELECTION 2023 RESULT UPDATE 10 AM


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->