தண்ணீர் திறக்க கூடாது! கே.ஆர்.எஸ் அணை முன் தீப்பந்தம் ஏந்தி! விடிய விடிய போராட்டம்!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தில் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் கர்நாடக மாநில காவிரியில் அமைந்துள்ள கே.ஆர்.எஸ் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

நேற்று காலை வரை வினாடிக்கு 6,000 கன அடியாக இருந்த நீர் திறப்பானது நேற்று மாலை நிலவரப்படி 9,000 கண்ணாடியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கே.ஆர்.எஸ் அணையின் முன்பு விவசாய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தர்ஷன் புட்டனய்யா தலைமையில் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மைசூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீப்பந்தத்தை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் பதற்றமான சூழல் நிலவியது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீசார் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து கே.ஆர்.எஸ் அணையின் முன்பு இன்று போராட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் தமிழகத்திற்கு திறந்து விடும் தண்ணீரை உடனடியாக நிறுத்தாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை தொடர்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka farmers protest with torches in front of KRS dam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->