வேட்டி அணிந்து வந்ததால் அனுமதி மறுப்பு... கர்நாடக அரசின் அடுத்தகட்ட அதிரடி! விவசாயிக்கு கிடைத்த மரியாதை.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, ராணிபென்னூரை சேர்ந்தவர் பகீரப்பா. இவரது மகன் பெங்களூருவில் வசித்து வருகிறார். பகீரப்பா பெங்களூருக்கு வந்திருந்த போது தனது மகனுடன் அருகே உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு நேற்று முன்தினம் சினிமா பார்ப்பதற்காக சென்று உள்ளனர். 

அப்போது அவர் வேஷ்டி அணிந்திருந்து தலையில் துண்டுவை சுற்றிக்கொண்டு இருந்தார். இவரைப் பார்த்த காவலாளி வணிக வளாகத்திற்குள் செல்ல அனுமதி வழங்க மறுத்து விட்டதால் பகீரப்பா வணிக வளாகத்தில் இருந்து மகனுடன் வீடு திரும்பினார். 

இது குறித்து அறிந்த கன்னட அமைப்பினர் நேற்று காலையில் வணிக வளாகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வணிக வளாகத்திற்கு எதிராகவும் விவசாயிக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பி வணிக வளாக உரிமையாளர் பகீரப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் நடந்த சம்பவத்திற்கு வணிகவளாக நிர்வாகம் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பகீரப்பாவை வரவழைத்து அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து வணிக வளாக நிர்வாகத்தினர் கௌரவித்தனர். 

வணிக வளாகத்திற்குள் பகிரப்பாவை உற்சாகமாக அழைத்துச் சென்ற பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதே சமயத்தில் விவசாயியை வணிக வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வணிக வளாகத்தை ஒரு வாரத்திற்கு மூட வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka govt orders closure commercial premises


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->