இரண்டாவது நாளாக... கர்நாடகாவில் லோக் ஆயுக்தா சோதனை! பரபரப்பில் மாநிலம்.!
Karnataka Lok Ayukta raid
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வருமானத்திற்கும் அதிகமான சொத்துக்கள் சேர்த்த அதிகாரிகள் வீடுகள் மற்றும் அவர்களது அலுவலகங்கள் உறவினர்கள் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லோக் ஆயுக்தா போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கோடி கணக்கான சொத்து ஆவணங்கள், பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சோதனை நடத்தப்பட்ட அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று காலை முதல் மீண்டும் லோக் ஆயுக்தா போலீசார் கர்நாடக மாநிலத்தில் 51 இடங்களில் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருகிறது.
பெங்களூரு, சிமோகா, யாதகிரி, தும்கூர் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் இன்று அதிகாலை முதலில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை நடைபெறும் அதிகாரிகள் பட்டியல் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என லோக் ஆயுக்தா போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையால் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.
English Summary
Karnataka Lok Ayukta raid