சிறையில் திடீர் சோதனை! அலறிய கைதிகள்! சிக்கிய போதைப்பொருள், செல்போன்கள்!
Karnataka Mangalore Jail the authorities seized cellphones and ganja during a surprise raid
கர்நாடக மாநிலம் மங்களூர் சிறையில் அதிகாரிகள் திடீரென சோதனை செய்தபோது சிறையில் செல்போன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநில மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் அனுபம்அகர்வால் தலைமையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மத்திய நகர சிறைச்சாலையில் போலீசார் திடீரென சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனை யில், 150 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளில் போலீஸர் தீவிர சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.
அப்போது சோதனையின் போது கைதிகளிடமிருந்து 25 செல்போன், 1 ப்ளூடூத் கருவி, 5 இயர் போன், 1 பென்டிரைவ், 5 சார்ஜர்கள், 1 கத்திரிக்கோல், 3 சார்ஜர் கேபிள்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பிற போதை பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து கைதிகளிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சிறைச்சாலைக்குள் இத்தனை பொருட்கள் எப்படி உள்ளே வந்தது இதற்கு காவல்துறை உடந்தையா? என்ற கோணத்தில் மேல் காவல் அதிகாரிகள் தீவிரமாக சிறைகாவலர்களிடம் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
English Summary
Karnataka Mangalore Jail the authorities seized cellphones and ganja during a surprise raid