யாரும் நடிகர் தர்ஷனை காப்பாற்ற முயற்சிக்கவில்லை - கர்நாடக போலீஸ் மந்திரி! - Seithipunal
Seithipunal


கன்னட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகராக இருந்தவர் ரேணுகாசாமி. இவர் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர். இவரை கடந்த ஜூன் 8ம் தேதி 4 பேர் கும்பல் நடிகர் தர்ஷனை பார்க்க அழைத்துச் செல்வதாக கூறி காரில் கடத்திச் சென்று பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் அருகே பட்டணகெரேயில் ஒரு கார் ஷெட்டில் அடைத்து வைத்து அடித்தே கொன்றுள்ளனர்.

அதன் பின்னர் அவரது உடலை அருகில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் வீசி சென்றுள்ளனர். இந்த கொலை தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உட்பட மேலும் 19 பேரை அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த கொலையில் புனித் என்ற ஒருவரின் காரில் தான் ரேணுகாசாமியின் உடலை எடுத்துச் சென்று அப்புறப் படுத்தியுள்ளனர் . இதையடுத்து புனித்தின் காரை பறிமுதல் செய்து அவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மந்திரி ஒருவர் தர்ஷனை காப்பாற்ற முயற்சிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

இது குறித்து கூறிய கர்நாடக போலீஸ் மந்திரி பரமேஸ்வரா, "மற்றவர்களை போலவே தான் நடிகர் தர்ஷனும் சிறையில் நடத்தப் படுகிறார். அவருக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. மேலும் யாரும் அவரை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. இந்த வழக்கில் நாங்கள் மிகவும் வெளிப்படையான விசாரணையை தான் நடத்தி வருகிறோம். இந்த வழக்கு குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் திட்டமிட்டு பரப்பப் படுகிறது" என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Police Minister Says Nobody is Trying to Save Actor Dharshan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->