#வீடியோ | முதியவரை இருசக்கர வாகனத்தில் தரதரவென இழுத்துச்சென்ற கொடூரம்! - Seithipunal
Seithipunal


கர்நாடக : பெங்களூரு மகடி சாலையில், இன்று இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், வாகனத்தின் பின்புறம் முதியவர் ஒருவரை 1 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியே தரதரவென இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, இருசக்கர வாகன ஓட்டி வந்த நபரை கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். 

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கர்நாடக மாநிலம், விஜய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தப்பா (வயது 55) என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், முதியவர் ஓட்டி வந்த கார் மீது, இருசக்கர வாகன ஓட்டி மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். 

இதனால் அந்த முதியவர் தனது காரில் இருந்து கீழே இறங்கி இருசக்கர வாகன ஊட்டியிடம் சண்டையிட்டுள்ளார்.

அப்போதும், அவர் நிற்காமல் தப்பி செல்ல முயற்சிக்கவே, அவரை பிடிக்கும் நோக்கில், இருசக்கர வாகனத்தின் பின் பகுதியை பிடித்துள்ளார். 

ஆனால், இருசக்கர வாகன ஓட்டி முதியவரை தரதரவென இழுத்து கொண்டே சென்றுள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka scooter accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->