கர்நாடகாவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் சித்தராமையா! - Seithipunal
Seithipunal


கடந்த 5 நாட்களாக கர்நாடக மாநில முதல்வர் என்ற போட்டி இன்று முடிவுக்கு வந்துள்ளது. நாளை மறுநாள் நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

நடந்துமுடிந்த இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றியதில் முதலிடம் டி கே சிவகுமார் தான். 

அவர் தான் முதலமைச்சராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை தேர்வு செய்துள்ளது. 

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி கே சிவக்குமாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

வருகின்ற இருபதாம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில், இன்று காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது.

பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் ஆட்சியமைக்க சித்தராமையா உரிமை கோரினார்.

எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த நிகழ்வின்போது, டி.கே.சிவகுமார் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka Siddaramaiah meet governor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->