ஜெயலலிதாவின் சொத்துகளை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது - கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
jayalalitha Property case
ஜெயலலிதாவின் சொத்துகளை ஒப்படைக்க கோரி தீபா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தீபா தரப்பு தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து, "சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தெளிவாகவே இந்த சொத்துக்கள் அனைத்தும் அரசின் பறிமுதல் செய்வதற்கே உரியது என உத்தரவிட்டுள்ளது," என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
மேல்முறையீடு செய்ய விரும்பினால், உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என தீபாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
jayalalitha Property case