நோட் பண்ணுங்க தவெக தொண்டர்களே! தை 1 தான் இனி உங்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு - விஜய் சொன்ன செய்தி! - Seithipunal
Seithipunal


பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

அதில்"பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.

2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!

இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்றாக பெரும்பாலானோர் கொண்டாடி வருகின்றனர். மேலும், தை பிறப்பே தமிழ் புத்தாண்டு என்றும் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் திமுக-அதிமுக ஆட்சி மாற்றம் நடந்தால் தமிழ் புத்தாண்டும் மாற்றப்பட்டு அறிவிக்கப்படுவது வாடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thai 1 Tamil New year TVK Vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->