கர்நாடகா : கல்லூரியில் புர்கா அணிந்து நடனமாடிய 4 மாணவர்கள் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு வமன்ஜூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் நேற்று மாணவர் சங்க துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நான்கு மாணவர்கள் பாலிவுட் பாடலுக்கு நடனமாடினர். 

அவர்கள் அனைவரும் இஸ்லாமிய மத பெண்கள் அணியும் மத உடையான புர்காவை அணிந்து நடனமாடினர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த நான்கு மாணவர்களும் புர்கா அணிந்து நடனமாடுவதை மேடைக்கு கீழே இருந்த மாணவர்கள் ஆரவாரமாக கொண்டாடினர். 

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நடனமாடிய நான்கு மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. 

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாவது, "கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் இந்த நிகழ்ச்சி இல்லை. புர்கா அணிந்து நடனமாடிய  மாணவர்கள் அனைவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள். கல்லூரியில் உள்ள அனைவருடைய மத நல்லிணக்கத்திற்கு தீங்கு இழைக்கும் எந்த நடவடிக்கையையும் நிர்வாகம் ஆதரிக்காது" என்றது தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka state private college students suspend for dance wearing burka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->