உண்டியல் குலுக்கி! மரியாதையை காப்பாத்திக்கங்க சு. வெங்கடேசன்! பாஜக நிர்வாகியின் டிவிட்! வரவேற்ற நிர்மலா சீதாராமன்!
CPIM MP DMK Rajin BJP SG Suryah Central Minister Niramala CA exam date issue
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் சமயத்தில் பட்டயக் கணக்காளர் தேர்வை மத்திய அரசு வைத்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், "பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் வருகிற ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த தேதிகளில் தமிழர் பண்டிகைகளான பொங்கல் திருநாள், திருவள்ளுவர் தினம், விவசாயிகளுக்கான தினம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன.
எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிட வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.
சு.வெங்கடேசனுக்கு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கொடுத்த பதிலில், "சு.வெங்கடேசன் இப்படி எங்காவது மாட்டுவாப்லனு தெரியுமே! கதை எழுதுபவருக்கு Professional Courses குறித்து என்ன தெரியும்? அதெல்லாம் படித்து தேர்ச்சி பெறுபவர்கள் domain. தங்களுக்கு எதற்கு இதெல்லாம்?
சரி விஷயத்துக்கு வருவோம்.
பொங்கல் தமிழகம் மட்டும் கொண்டாடும் பண்டிகையா? 24 மணிநேரமும் பொய் பேசுவதற்கு பதில் மற்ற மாநில கம்யூனிஸ்டுகளிடம் கேட்டு பொது அறிவை வளர்த்துக்கொள்ளலாமே?
இதே பொங்கல் தான் பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி, வட இந்தியாவில் லோஹ்ரி, உ.பி-யில் கிச்சடி, குஜராத் & ராஜஸ்தானில் உத்தராயணி, ஹரியானா & பஞ்சாபில் மாஹி, வடகிழக்கு மாநிலங்களில் பிஹு என கொண்டாடப்படுகிறது. முதலில் பிரிவினை பேசுவதற்கு முன் பொங்கல் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகை என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
அப்படியெனில் இது எப்படி தமிழருக்கு மட்டும் எதிரானதாகும்?
எம்.பி என்பதால் பாராளுமன்ற கேண்டீனில் 24 மணி நேரமும் உட்கார்ந்து பெஞ்சு தேய்க்காமல் நாலு பேருடன் பேசியிருந்தால் அடிப்படை அறிவு கிஞ்சித்தேனும் வளர்ந்திருக்குமே?
இரண்டாவதாக, CA தேர்வு தேதிகளை முடிவு செய்வது மத்திய அரசோ, நிதி அமைச்சகமோ இல்லை. அது தன்னாட்சி பெற்ற Institute of Chartered Accountants of India - ICAI எனும் அமைப்பு. அதற்கு பல்வேறு அளவுகோள் உள்ளது. உதாரணமாக கம்யூனிஸ்ட் கட்சி கூட்டமெனில் 10 பேர் கூட வர மாட்டார்கள்; so எப்போது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
ஆனால், CA தேர்வு என்பது லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு, எதிர்காலம் - எனவே பல்வேறு factors-ஐ கருத்தில் கொண்டு தான் தேர்வு தேதிகளை முடிவு செய்ய முடியும்.
மூன்றாவதாக, Professional Courses-க்கான தேர்வுகளுக்கு இத்தகைய விடுமுறை நாட்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பது அதை கஷ்டப்பட்டு படிப்பவர்களுக்கு தான் தெரியும். தங்களை போன்ற உண்டியல் குலுக்குகளுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை.
தாங்கள் 7 ஜெனமம் எடுத்தாலும் இந்தியாவில் உள்ள ஒரு Professional Course-ஐ கூட படித்து தேர்ச்சி பெற முடியாது; அவர்கள் வாழ்க்கையில் விளையாடி அரசியல் செய்ய நினைத்தால் அந்த கனவு பலிக்காது!
சரி இதை சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறது. நானும் இதேபோன்றொரு Professional Course-ஐ கஷ்டப்பட்டு படித்து.. படித்து (உண்டியல் குலுக்கி அல்ல!) தேர்ச்சி பெற்றவன்.
அதனால் சொல்கிறேன் மரியாதையை (அப்படி ஒன்று தங்களுக்கு இருப்பதாக தாங்கள் கருதினால் மட்டும்(!)) காப்பாற்றிக் கொள்ளவும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக நிர்வாகியின் கண்டனத்திற்கு ஆங்கிலத்தில் பதில் கொடுத்த எஸ்.ஜி.சூர்யாவின் பதிவை பகிந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா அவர்களே. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் “தமிழ் விரோதி” ப்ரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
CPIM MP DMK Rajin BJP SG Suryah Central Minister Niramala CA exam date issue