உத்தரப் பிரதேசத்தில் பயங்கர வன்முறை!....ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பலில் ஷாஜி ஜமா மஸ்ஜித் என்ற மசூதி உள்ள நிலையில், மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்து கோவிலை இடித்து இந்த மசூதி கட்டியிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்காக, நீதிமன்ற உத்தரவின் பேரில் மசூதியை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இதோஎடுத்து இந்த குழுவினர் இன்று காலையில் மசூதியை ஆய்வு செய்ய சென்றனர். அப்போது மசூதி அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு, மசூதியில் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்

தொடர்ந்து முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி, வாகனங்களுக்கும் தீ வைத்ததால் பதற்றம் நிலவியது.

இதையடுத்து உடனடியாக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். பிறகு நிலைமை கட்டுக்குள் வந்த நிலையில், அதிகாரிகள் மசூதிக்குள் சென்று ஆய்வு செய்தனர்.

முன்னதாக வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக  5 நபர்களுக்கு மேல் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தடையை மீறி  வன்முறையில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible violence in uttar pradesh stone pelting on the officials who went to the examination vehicles were set on fire


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->