5 வயது குழந்தையுடன் தீ குளிக்க முயன்ற இளம்பெண்: குடும்ப தகராறில் விபரீதம்! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 37 வயது இளம்பெண் தனது கணவர், 5 வயது குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வாசித்து வருகிறார். 

பெண்ணின் கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் இளம்பெண்ணிற்கும் கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனவேதனை அடைந்த இளம் பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு கியாஸ் சிலிண்டரை திறந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நீண்ட நேரம் கதவை தட்டியும் இளம்பெண் கதவை திறக்கவில்லை இதனால் உடனடியாக குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணிடம் கதவை திறக்குமாறு கேட்டுள்ளனர். 

ஆனால் இளம் பெண் திறக்காததால் தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து அறைக்குள் நுழைந்து தற்கொலைக்கும் முயன்ற பெண்ணையும் 5 வயது குழந்தையும் பத்திரமாக மீட்டனர். 

பின்னர் கசிந்து கொண்டிருந்த கியாஸ் சிலிண்டரை சரி செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

குடும்ப தகராறில் இளம்பெண் 5 வயது குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka woman tried commit suicide with child


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->