#BREAKING || தமிழக எம்பி-க்கு ஜாமீன் - டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
Karthi Chidambaram China visa ed case
சீன விசா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது பஞ்சாப் மின் திட்டத்தில் 263 சீன நாட்டவர்களுக்கு விசாவை மீண்டும் பயன்படுத்துவதற்கு, உள்துறை அமைச்சர் ஒப்புதலை பெறுவதற்காக எஸ் பாஸ்கர ராமன் மூலம், காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் இந்த விவகாரத்தில் கடந்த 2022 மே மாதத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிறுய்ந்தது
இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணையை அமலாக்கத்துறை நடத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தின் தந்தை பா சிதம்பரம் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் மனுதக்கல் செய்திருந்தார்.
இது வழக்கு பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத் துறையின் இந்த வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
Karthi Chidambaram China visa ed case