திருப்பதியில் நாளை கருட சேவை: வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்றைய தினம், ஏழுமலையான் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளியிருப்பது, பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவு சர்வ பூபால வாகன உற்சவமும் நடைபெற உள்ளது.  

முதல் முக்கிய நிகழ்வாக நாளை மோகினி அவதாரத்தில் ஸ்ரீநிவாச பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதன் பின் பிரமோற்சவத்தின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை நிகழ்வு நாளை மாலை நடைபெறவுள்ளது. 

இந்த ஆண்டு கருட சேவை வழக்கத்தை விட 30 நிமிடங்கள் முன்பாக, மாலை 6.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இரவு 11 மணி வரை, தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் திருவேடத்தில், பல நகை அலங்காரங்களுடன் மாட வீதிகளில் எழுந்தருளி, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் பெறுவார்கள். 

பெரிய அளவில் வரும் பக்தர்களை சமாளிக்க கோவில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. குறிப்பாக, 6 மணி நேரத்திற்கு மேல் இரண்டு சக்கர வாகனங்கள் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன நிறுத்தும் இடங்கள் பல்வேறு இடங்களில் QR கோடுகள் மூலம் அறியக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

ஆந்திர மாநில போக்குவரத்து துறை, வேலூர், சென்னை மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கியுள்ளது. மாட வீதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்ந்தும், நின்றபடியும் கருட சேவையை தரிசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மாட வீதிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க, கேலரிகளில் வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை கொண்டு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்காக கூடுதல் அன்னதானம் மற்றும் பால் வழங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நேற்று பக்தர்கள் நேரடி இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karuda service tomorrow in Tirupati Strict restrictions on vehicles


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->