இஸ்ரேல் வான்வழித் தாக்குதலுக்கு லெபனானில் 11 பேர் பலி!
11 people were killed in an israel airstrike in lebanon
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர்.
இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை தாக்கி வந்தனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்ததில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
இதனையடுத்து இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது.
அதன்படி இஸ்ரேலில் உள்ள நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்த நிலையில், லெபனான் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை லெபனானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் காயமடைந்தாகவும் லெபனான் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக இஸ்ரேலின் வடக்கே ஹைபா நகர் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
11 people were killed in an israel airstrike in lebanon