சென்னை மாநகராட்சி அதிர்ச்சி தகவல்!...மெரினாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் 'ஏர் ஷோ 2024' என்ற பெயரில்  முதல்முறையாக விமான சாகச நிகழ்ச்சி நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 வரை சிறப்பாக நடைபெற்றது.

இந்த விமான சாகசத்தில், முதலாவதாக, ஆகாஷ் கங்கா குழுவினர், 2000 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

சேத்தக் ஹெலிகாப்டர்கள் மூவர்ண தேசியக்கொடியை பறக்கவிட்டப்படி வானை அதிர வைத்த நிலையில், தஞ்சையில் இருந்து புறப்பட்ட ரபேல் விமானங்கள் சென்னை மெரினா கடற்கரையை வலம் வந்தது. அதுமட்டுமல்லாமல் இடிமுழுக்கத்துடன் ரபேல் விமானங்கள் பறக்க பறக்க கடற்கரையில் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற மெரினா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அந்த வகையில் அகற்றப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டும் 4 டன் இருந்ததாகவும், 128 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும்,  30-க்கும் மேற்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் மூலம் மண்ணில் புதையுண்டு இருந்த சிறிய  குப்பைகள் அகற்றப்பட்டதாக  தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு கடற்கரை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shocking information of the chennai corporation 18.5 tons of garbage was removed from the Marina in one day only yesterday


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->