உத்தரபிரதேசத்தில் தடம் புரண்ட காசி எக்ஸ்பிரஸ்.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாந்த்ரா முனையத்திலிருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

இதைத்தொடர்ந்து, நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூருக்குச் சென்ற காசி எக்ஸ்பிரஸ் பிரயாக்ராஜ் ரெயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென ரெயிலின் ஒரு பெட்டி  தடம் புரண்டது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன் பின்னர் ரெயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட பெட்டியை பிரித்து விட்டு மற்றொரு பெட்டியை அதனுடன் இணைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து பிரயாக்ராஜ் கோட்ட ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "காசி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பேட்டி தடம் புரண்டதால் ரெயில் போக்குவரத்து எதுவும் பாதிக்கப்படவில்லை" என்று அவர் தெரிவித்தார். 

மேலும், காசி எக்ஸ்பிரஸ் மூன்று மாநிலங்கள் வழியாக செல்லும் மிக நீண்ட தூர ரெயில்களில் ஒன்று ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kashi express derail in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->