காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்தப்படும்  'ஐ.என்.எஸ்., விக்ராந்த்' தாங்கி போர் கப்பல்..! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே காட்டுப்பள்ளி துறைமுகத்தில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'ஐ.என்.எஸ்., விக்ராந்த்' என்ற விமானம் தாங்கி போர் கப்பல், நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்திய கடற்படைக்காக, பிரதமர் மோடி இரு தினங்களுக்கு முன், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற, பிரம்மாண்ட விமானம் தாங்கி போர் கப்பலை,  நாட்டுக்காக அர்ப்பணித்தார். இந்தக் கப்பல், மொத்தம், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு, 860 அடி நீளமும், 203 அடி அகலமும் உடையது; 4.30 கோடி கிலோ எடையை சுமக்கும் திறனும் கொண்டது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமை அலுவலகம் உள்ளது. இந்நிலையில், கிழக்கு பிராந்தியத்தின் கீழ், விக்ராந்த் கப்பலை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தால், அங்கு வசதியை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

விசாகபட்டினத்தில் பணிகள் முடியும் வரை விக்ராந்த் கப்பலை, சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. போர் கப்பலை நிறுத்துவதற்கான இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன.

சமீபத்தில், பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பு பணிக்காக அமெரிக்க கடற்படையின் போர் கப்பலானது காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு வந்ததனால், அடுத்த சில ஆண்டுகளுக்கு விக்ராந்த் கப்பல், இந்த கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kattupally port Warship carrying 'INS, Vikrant' stationed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->