இந்தியாவை ஆம் ஆத்மி பா.ஜ.கவிடம் இருந்து விடுவிக்கும் - கெஜ்ரிவால் பேச்சு!
Kejriwal speech goes viral
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க கட்சி மீது ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பேரம் நடத்துவதாக குற்றச்சாட்டினார்.
இதனால் டெல்லி சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது அவர் பேசியிருப்பதாவது, பா.ஜ.கவுக்கு ஆம் ஆத்மி காட்சி சவாலாக உள்ளது.
அதனால் தான் எல்லா பக்கத்திலும் இருந்தும் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இன்று யாரையாவது பார்த்து பா.ஜ.க பயப்படுகிறது என்றால் அது ஆம் ஆத்மி மட்டும்தான்.
வருகின்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்படவில்லை என்றால் 2029 ஆம் ஆண்டு பா.ஜ.கவிடமிருந்து இந்தியாவை ஆம் ஆத்மி விடுவிக்கும்.
என்னை கைது செய்து விட்டால் ஆம் ஆத்மி கட்சி முடிவுக்கு வந்துவிடும் என நினைக்கலாம். ஆனால் நீங்கள் எனது கருத்துக்களை எப்படி முடிவுக்கு கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Kejriwal speech goes viral