அடுத்தடுத்து இறந்து போன 21 வயது பெண்ணின் குடும்பம்.! அதிர்ச்சி காரணம்.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் தொடுப்புழா பகுதியை சேர்ந்த 62 வயது ஆன்டனிக்கு ஜெசி என்ற 56 வயது மனைவியும், சில்னா என்ற 21 வயது மகளும் இருந்துள்ளனர். ஆண்டனி ஒரு பேக்கரி நடத்தி வந்துள்ளார். இவருக்கு பண பிரச்சனை ஏற்பட்டு இருந்தது.

எனவே பல இடங்களில் கடன் வாங்கிய அவர் அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத அளவிற்கு அந்த குடும்பத்திற்கு சிரமம் ஏற்பட்டது. இதனால், விரக்தியில் இருந்த அந்த குடும்பத்தினர் 8 நாட்களுக்கு முன் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தனர்.

பின்னர், அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஜெசி முதலில் உயிரிழந்தார்m அதன் பின் ஆண்டனியும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்  தற்போது சில்னாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்து இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala 21 years Girl and family died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->