கொட்டித்தீர்க்கும் கனமழை... 4 மாவட்டங்களுக்கு ''மஞ்சள் அலெர்ட்''! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கேரளா, வடக்கு கடற்கரை முதல் தென் கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் இன்று மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி பாலக்காடு, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

இதனால் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி வரை மழை நீட்டிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாளை இரவு 11:30 மணி வரை கேரளா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் காற்று அதிகமாக இருக்கும். மேலும் ராட்சத அலைகள் வீச கூடும் என்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

எனவே மீன்பிடி படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கவும் கடற்கரைப் பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala 4 districts yellow alert


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->