இரு மாநில அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்வு.!  - Seithipunal
Seithipunal


உக்ரைன் - ரஷ்ய நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. இதன் காரணமாக நாட்டில் உள்ள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று முதல் இந்த இரு மாநிலங்களிலும் பேருந்து கட்டணங்கள் உயர்ந்து உள்ளது.

ஆந்திரா மாநிலம் :

கிராமப்புறங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் ஆரம்ப டிக்கெட்டின் விலை ரூ. 10, தொடர்ந்து கிலோமீட்டருக்கு ஏற்றவகையில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமான கட்டணத்தை விட டீலக்ஸ் பஸ்சில் ரூ.5, சூப்பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டண உயர்வு காரணமாக டாக்சி, ஆட்டோ கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

கேரளா மாநிலம் :

மே 1-ந் தேதி முதல் பஸ், டாக்சி கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கேரள மாநில போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜ் தெரிவித்து உள்ளார். மேலும், ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமும் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala andhra bus ticket price hike


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->