கேரளாவை உலுக்கிய குண்டு வெடிப்பு: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! விசாரணையில் என்.ஐ.ஏ.! - Seithipunal
Seithipunal


கேரளா, களமச்சேரி பகுதியில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் கடந்த 29ஆம் தேதி யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் திடீரென நான்கு புறமும் குண்டு வெடித்ததில் இரிங்கோல் பகுதியைச் சேர்ந்த லியோனா பவுலோஸ் (வயது 45), இடுக்கி பகுதியைச் சேர்ந்த குமாரி (வயது 53) மற்றும் 12 வயது சிறுமி ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொச்சியை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் என்பவரை போலீசார் கைது செய்து உபா சட்டம், கொலை முயற்சி, வெடி மருந்து தடுப்புச் சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்த சதி திட்டத்தை நிறைவேற்றியது குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்தன. 

தீவிர விசாரணைக்கு பிறகு பிடிபட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது. மேலும் பிடிபட்ட குற்றவாளி, வெடிகுண்டு சதியில் தான் ஒருவர் மட்டுமே ஈடுபட்டதாக தெரிவித்திருந்தாலும் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகமடைந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், டோமினிக் மார்ட்டின் வெளிநாட்டு தொடர்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் களமச்சேரி குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்த மொலிஜாய் (வயது 61) என்ற பெண் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இதனை அடுத்து, குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 19 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala blast increasing death NIA investigation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->