முன்னாள் ஆளுநரை கை நீட்டி பேசிய அமித்ஷா - காங்கிரஸ் கண்டனம்.!
kerala congrass condems amitsha and tamilisai issue
மக்களவை தேர்தலில் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழக பாஜக தலைமையை வெளிப்படையாகவே விமர்சித்து வந்தார். இதற்கு அண்ணாமலை தரப்பும் பதிலடி கொடுத்து வந்தது.
இந்த நிலையில் இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழிசையும் பங்கேற்றிருந்தார். அங்கு விழா மேடையில் அமித்ஷா மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வணக்கம் வைத்துவிட்டு நகர்ந்தார். பின்னர் தமிழிசையை அழைத்த அமித்ஷா, கடுமையான முகத்துடன் கை விரல்களை உயர்த்தி கண்டிப்புடன் தமிழிசையிடம் பேசினார்.
இந்த விவகாரம் தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "பெண்களை பாஜக எப்படி இழிவாக நடத்துகிறது என்பதற்கு இதுதான் சான்று. கொஞ்சமாவது சுயமரியாதை இருந்தால் தக்க பதிலடி கொடுத்துவிட்டு பாஜகவில் இருந்து விலகியிருப்பார்கள். ஒரு மருத்துவர், முன்னாள் ஆளுநரான தமிழிசை இத்தகைய அவமானங்களை தாங்கிக் கொள்ளக் கூடாது. உடனே பாஜகவில் இருந்து விலக வேண்டும்” என்றுத் தெரிவித்துள்ளது.
English Summary
kerala congrass condems amitsha and tamilisai issue