காங்கிரஸ் கட்சியில் படுக்கைக்கு அழைக்கும் கீழ்த்தரமான நடைமுறை! அதிரவைத்த நிர்வாகி காங்கிரசிலிருந்து நீக்கம்!
Kerala Congress Harassment Hema Committee
கேரளத் திரை உலகில் மட்டுமல்ல, கேரள காங்கிரஸ் கட்சியிலும் பாலியல் அத்துமீறல் இருப்பதாக குற்றம் சாட்டிய பெண் நிர்வாகியை, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தின் திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்கள் குறித்த ஹேமா ஆணையத்தின் அறிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார்கள் அளித்து வருகின்றனர். மேலும் இந்த புகார்கள் சம்பந்தமாக நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கையில் கேரள மாநில போலீசார் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், கேரள மாநில காங்கிரஸ் கட்சியிலும் காஸ்டிங் கவுச் எனப்படும் படுக்கைக்கு அழைக்கும் கீழ்த்தரமான நடைமுறை இருப்பதாக, அக்கட்சியின் பெண் நிர்வாகி சிமி ரோஸெபெல் ஜான் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவரின் பேட்டியில், காங்கிரஸ் கட்சியில் உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்றால், தங்களுக்கு நடக்கும் அத்துமீறல்களை பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.
தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் விடி சதீசன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ஏற்றார் போல் நடந்து கொண்டால் மட்டுமே, பெண்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.
இன்னும் சில நிர்வாகிகள் பெண் நிர்வாகிகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி உள்ளனர். அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாக அந்த பெண் நிர்வாகி பேட்டியளித்து இருந்தார்.
இந்த நிலையில், சிமியின் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் சதீசன் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், அவருக்கு ஆதரவாகவே கட்சி இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சிமி காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Kerala Congress Harassment Hema Committee