கேரள மூத்த காங்கிரஸ் தலைவர் கே.பி.விஸ்வநாதன் காலமானார்! - Seithipunal
Seithipunal


கேரள முன்னால் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கே.பி. விஸ்வநாதன் (வயது 83) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 

வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்து விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கே.பி. விஸ்வநாதன் குன்னம்குளம் மற்றும் கொடகரா  தொகுதிகளில் மாநில சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இளைஞர் காங்கிரஸ் மூலம் அரசியலில் அடி எடுத்து வைத்த இவர் கடந்த 1967 முதல் 1970 வரை திருச்சூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். இவரது மறைவிற்கு கேரள பேரவை தலைவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Congress Senior leader passed away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->