நாட்டிலேயே ஊழல் குறைந்த மாநிலம் என்ற பெருமை கேரளாவிற்கு உள்ளது - முதல்வர் பினராயி விஜயன்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் நடைபெற்ற "ஊழலற்ற கேரளா" என்ற பிரசார இயக்கத்தை மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். 

அதன் பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் தெரிவித்ததாவது; 

"ஒரு நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு ஊழலற்ற நிர்வாகம் தான் மிகவும் முக்கியம். கேரள அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகள் காரணமாக தென் மாநிலங்களிலேயே கேரளாவில் தான் அதிக அளவில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

சில இடங்களில் சில ஊழல் சம்பவங்கள் இருந்தாலும் கூட கேரளாவில் ஊழல் மிகப் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே ஊழல் குறைந்த மாநிலம் என்ற பெருமை கேரளாவிற்கு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala Corruption low state chief minister speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->