8 வயது மகனுக்கு பாலியல் தொல்லை..! தந்தைக்கு 90 ஆண்டுகள் சிறை..! கேரள நீதிமன்றம் அதிரடி...! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் எட்டு வயது மகனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கேரள மாநிலம் பையனூர் பகுதியை சேர்ந்தவர் 44 வயதான கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவரது 8 வயது மூத்த மகனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுவன் பள்ளியில் மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளான். இதனால் சிறுவனுக்கு குழந்தைகள் நல அதிகாரிகள் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.

அப்போது விசாரித்ததில், சிறுவனுக்கு அவரது தந்தையை அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல அதிகாரிகள் இதுகுறித்து பையனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை பையனூர் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனின் தந்தைக்குஐபிசி பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், போக்சோ சட்டத்தின் பிரிவு 3 (ஏ), 5 (எல்), (எம்), மற்றும் (என்) ஆகியவற்றின் கீழ் தலா 20 ஆண்டுகளும் சிறைத்தண்டனை என மொத்தம் 90 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1.25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala court sentences father to 90 years in prison for sexually abusing 8 year old son


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->