மாணவர்களின் வருகையை பெற்றோர்கள் அறியும் புதிய திட்டம் - கேரளாவில் தொடக்கம்.!
kerala education department start new mobile app for parents watch students attendance
கேரள மாநிலத்தில் கல்வித்துறையின் தொழில்நுட்ப பிரிவான 'கேரள கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம்' சார்பில், 'சம்பூர்ணா பிளஸ்' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட தகவல்களை பெற்றோர் தெரிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், விளையாட்டு போட்டிகளில் அவர்களின் ஈடுபாடு என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த செயலி மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும்.
மாநிலம் முழுதும், 12,943 பள்ளிகளில் படிக்கும், 36.44 லட்சம் மாணவர்களின் தகவல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய சேவை மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
kerala education department start new mobile app for parents watch students attendance