ரூ.80 லட்சம் லாட்டரி பரிசு வென்ற நபரை தேடிய அதிகாரிகள்., காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் அரசு நடத்தும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இந்த லாட்டரி விற்பனையில் கடந்த சனிக்கிழமை காருண்யா லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெற்றது. முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியை அதிகாரிகள் தேடி வந்தனர்.

இதில், ஆலப்புழாவில் அடுத்துள்ள அரூர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்ற தொழிலாளிக்கு முதல் பரிசாக ரூபாய் 80 இலட்சம் கிடைத்திருப்பது தெரியவந்தது.

அரூரில் சண்முகம், ஒரு அறை மட்டுமே கொண்டு உள்ள குடிசை வீட்டில் தன் மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார்.

சண்முகத்திற்கு லாட்டரி சீட்டில் முதல் பரிசாக ரூபாய் 80 லட்சம் கிடைத்திருப்பது பற்றி தெரியவந்ததும், மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். 

மேலும் அவர், இந்தப் பரிசுப் பணத்தை கொண்டு புதிய வீடு கட்டுவேன் என்று தெரிவித்துள்ளார். சண்முகம் பரிசு விழுந்த இந்த சீட்டுடன் சேர்த்து நாலு சீட்டுகள் எடுத்திருந்தார். அந்த சீட்டுகளுக்கு ஆறுதல் பரிசாக ரூபாய் 8 ஆயிரமும் கிடைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala lottery win prize issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->