கேரளாவில் பதற்றம்: விபத்தில் சிக்கிய கடற்படை ஹெலிகாப்டர்... ஒருவர் பலி! - Seithipunal
Seithipunal


கொச்சியில் பயிற்சியின் போது கடற்படை ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா, கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் கடற்படை தலைமையகத்தின் ஐ.என்.எஸ். கருடா ஓடு பாதையில் இன்று பிற்பகல் வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டது. 

அப்போது திடீரென பயிற்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

இதனை அடுத்து படுகாயம் அடைந்தவரை மீட்டு கடற்கரை தள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்து, சேதக் ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடு பாதையில் மோதியதால் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது தொடர்பாக கடற்படை அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. விபத்து ஏற்பட்ட ஹெலிகாப்டரில் 2 பேர் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Navy helicopter accident one person killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->