கேரளாவில் பரவும் நிபா வைரஸ்:  2 பேர் பலி - அச்சத்தில் பொதுமக்கள்!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு, எலி காய்ச்சல் போன்றவை பரவி பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

பின்னர் கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பாதிப்பு கட்டுப்பாட்டுக்கு வந்த நிலையில் தற்போது நிபா வைரஸ் தொற்று பரவி 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கோழிக்கோடு மருதோங்கரை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். எந்தவித காய்ச்சலால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பரிசோதனை செய்யப்பட்ட போது அவருக்கு நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்துள்ளது. 

இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இதனை அடுத்து உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அவர்களிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டது. 

அதேபோல் வடகரை அருகே உள்ள திருவள்ளூரை சேர்ந்த ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டார். 

இவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு மாதிரிகளை தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டபோது இறந்தவர்கள் 2 பேருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது என தெரியவந்தது. 

மேலும் மாநில சுகாதாரத் துறை, நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தி வருகின்றனர். 

சுகாதார துறையின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன் முதலாக கேரளாவில் நிபா வைரஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அப்போது இந்த தொற்று காரணமாக 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Nipah virus 2 peoples died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->