கேரளா மாநிலத்தில் போலீசாரை பதற வைத்த வடமாநில தொழிலாளி! - Seithipunal
Seithipunal


திருவனந்தபுரத்தில் வடமாநில தொழிலாளிக்கு லாட்டரி குலுக்ககளில் விழுந்த ரூ.1 கோடி பணத்திற்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு சென்ற சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்து உள்ள தம்பானூர் காவல் நிலையத்திற்கு நேற்று வடமாநில தொழிலாளர்கள் கும்பலாக ஓடிவந்தனர். இதனை கண்ட காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் அனைவரும் மிரண்டு போனார்கள். 

மேலும் அவர்கள் காவல் நிலையத்தை தாக்க வருவதாக நினைத்து காவலர்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனை கருத்தில் கொள்ளாத தொழிலாளிகள் காவலர்கள் அருகில் சென்று கதறி அழுந்தனர்.

அதனை பார்த்த காவலர்கள் வட மாநில தொழிலாளிகளிடம் எதற்காக அழுகிறீர்கள் என கேட்ட போது, அதில் இருந்த ஒருவர் முன்வந்து கையில் இருந்த லாட்டரி சீட்டை காண்பித்து தனக்கு லாட்டரி குலுக்களில் ரூ.1 கோடி பரிசு விழுந்ததாக தெரிவித்தார்.   

இந்த பரிசு விழுந்ததால் தன் நண்பர்கள் சிலரால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என பயமாக உள்ளது, எனவே நான் இந்த பரிசு பணத்தை வாங்கி பாதுகாப்பாக ஊருக்கு போய் சேரும் வரை எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என போலீசாரிடம் கேட்டார். 

இதற்கு போலீசார், உங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்து பரிசு விழுந்த சீட்டை வங்கியில் டெபாசிட் செய்வது குறித்து வழிமுறைகளை தெரிவித்து அதன்பின்பு பரிசு சீட்டுடன் வடமாநில தொழிலாளியும், காவலர்களும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala police bengalative issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->