வீடு பார்க்கபோன முதியவரை ஆடையை கழட்டி.. சீரியல் நடிகை பகீர்.! கையும், களவுமாக பிடித்த போலீஸ்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான 75 வயது முதியவர் கேரள பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றுள்ளார். வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு சீரியல் நடிகை நித்யா சசி (வயது 32) என்றவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த முதியவருக்கு வீடு காட்டுவதாக கூறி நித்தியா அவரை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு நித்யாவின் உறவினர் பினு (48) என்பவர் வந்து முதியவரை மிரட்டி அவரது ஆடைகளை களையச் சொல்லி நித்தியாவுடன் ஆபாசமாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். அதன் பின் நித்யா மற்றும் பிணு இருவரும் சேர்ந்து அந்த முதியவரை மிரட்டி 25 லட்சம் பணம் கேட்டுள்ளனர்.

அவர் 11 லட்சம் வரை அவர்களது மிரட்டலுக்கு பயந்து கொடுத்துள்ளார். ஆனாலும் இருவரும் அடங்காமல் மீண்டும் மீண்டும் அந்த முதியவரை தொந்தரவு செய்தனர். இதை அடுத்து ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அந்த முதியவர் போலீசில் புகார் கொடுத்தார். 

அதன்பின் போலீசார் கொடுத்த ஆலோசனையின் படி முதியவர் அவர்கள் இருவருக்கும் கேட்ட பணத்தை கொடுப்பதாக கூறி வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு மறைந்திருந்த போலீசார் அவர்களை கையும் களவுமாக கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Serial actress arrested who cheating 75 years old men


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->