வயநாட்டில் இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Kerala Wayanad By Election 2024
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.
ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், வயநாடு மக்களவை தொகுதி தற்போது காலியாக உள்ளது. இதனால் வயநாட்டில் இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கை பேரிடர் காரணமாக தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது, உரிய நேரத்திற்குள் வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கும் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரே கட்டமாக அக்டோபர் 1ம் தேதி நடைபெற உள்ளது.
ஜம்மு காஷ்மீ, ஹரியாணா மாநிலத்திற்கு வரும் அக்டோபர் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
English Summary
Kerala Wayanad By Election 2024