காலிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 யூடியூப் சேனல்கள் முடக்கம்.!
Khalistan support 6 youtube channels ban
காலிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது மீண்டும் காலிஸ்தான் கோஷங்கள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் அஜ்னாலா காவல் நிலையத்தில் புகுந்து ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அங்கு காலிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இயங்கி வந்த இந்த சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்பு செயலாளர் அபூர்வா சந்திர தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு விடுத்த வேண்டுகோளின் படி இந்த யூடியூப் சேனல்களை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Khalistan support 6 youtube channels ban