காலிஸ்தான் பிரிவினை ஆதரவாளர் அம்ரித்பால் சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.! - Seithipunal
Seithipunal


சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் தனி நாடு என அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. 

கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த நிலையில் சமீப காலமாக  பஞ்சாப் மாநிலத்தில் தற்போது மீண்டும் காலிஸ்தான் கோஷங்கள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் அஜ்னாலா காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் அம்பரித்பால் சிங்கை கைது செய்ய போலீசார் தேடிவந்த நிலையில் தற்போது அவர் போலீசில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் கடந்து சில வாரங்களுக்கு முன்பு அவர் பஞ்சாபில் இருந்து தப்பித்து நேபாளத்திற்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில் காலிஸ்தான்  பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இதனிடையே அம்ரித் பால் சிங் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதன் மூலம் அவரை எந்த விசாரணையும் இன்றி ஒரு ஆண்டு காலம் சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Khalistan supporter Amritpal Singh Under National Security Act


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->