கொச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி! விசாரனையில் திடுக்கிடும் தகவல்! - Seithipunal
Seithipunal


விமானத்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கமான ஒரு நிகழ்வாகும். மேலும் சர்வதேச விமானங்களில் செல்லக்கூடிய பயணிகளுக்கு பாதுகாப்பு நடை முறைகள் சற்று அதிக நேரமாகவே இருக்கும்.

இது போன்று, கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல இருந்த ஒரு விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பு நடை முறைக்காக வரிசையில் நின்றிருந்தனர். 

அவர்களில் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த சாபு வர்க்கீஸ் (வயது 55) என்பவர் நீண்ட வரிசையில் வெகு நேரமாக காத்திருந்த அவர், வரிசையில் நிற்கும் ஒரு பயணியின் பையில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

திடீரென்று அவர் தெரிவித்த இந்த தகவலால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர், சாபு வர்க்கீஸ் காட்டிய பயணியின் பையை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். 

சோதனையில் அந்த பயணியின் பையில் வெடிகுண்டு இல்லை என்பதும், சாபு வர்க்கீஸ் தெரிவித்த தகவல் பொய் என்பதும் தெரியவந்தது. 

இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்ததில் அவர் தெரிவிக்கையில், பாதுகாப்பு நடை முறையால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால் எரிச்சல் அடைந்த வெடிகுண்டு இருப்பதாக புரளியை ஏற்படுத்தினேன் என தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து, விமான நிலைய அதிகாரிகள் சாபு வர்க்கீஸை போலீசாரிடம் ஒப்படைத்தனர். சாபு வர்க்கீஸை நெடும்பாசேரி போலீசார் கைது செய்தனர். கொச்சி விமான நிலையத்தில் பயணி வெடிகுண்டு புரளியை கிளப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kochi airport passenger bomb threat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->