கிரிக்கெட் மைதானத்தில் தொங்கிய இளைஞர் சடலம்! பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கொல்கத்தாவில் உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானமாக உள்ள ஈடன் கார்டன் கேலரி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் மைதானத்தை பராமரிக்கும் ஒருவரின் மகன் சனஞ்சய் பாரிக் (வயது 21) என கண்டறியப்பட்டுள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக இறந்தவரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் அவரை காணவில்லை என புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kolkata Eden Gardens ground young man Body found 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->