குவைத் தீ விபத்து.. உயிர் பிழைக்க மாடியில் இருந்து குதித்து பலியான சோகம்!
Kuwait Fire Accident
குவைத் நாட்டின் தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், இந்தியாவை சேர்ந்த 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.
உரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த இந்தியர்களின் உடலை மீட்க இந்திய தரப்பில் விமானம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப் பகுதியில் உள்ள ஆறு மாடிகள் கொண்ட தொழிலாளர்கள் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீபத்தில் இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் ஐந்து தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் இந்த தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பலரும் கவலைக்கிடாமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே வெளியான ஒரு அதிர்ச்சி தகவலின் படி, இந்த தீ விபத்தின் போது உயிர் பிழைப்பதற்காக பல தொழிலாளர்கள் மாடியில் இருந்து குதித்துள்ளனர். அதில் ஒரு சில ஒரு சிலர் கை, கால் எலும்பு முறிந்து படுகாயம் அடைந்ததாகவும், சிலர் கீழே விழுந்ததில் நிலை குலைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.